சனி, 9 ஜனவரி, 2010

செங்கொடி நீடுழி வாழ்க!

மாபெரும் நம்பிக்கைள் மற்றும் மாபெரும் ஏமாற்றம்! தேசிய வெறுப்புக்கு பதிலாக,பரஸ்பர அன்பு மற்றும் உறுதி! சகோதரர்களைக் கொல்லும் திட்டத்திற்கு பதிலாக,ஜாரிசத்திற்கு எதிரான மாபெறும் ஆர்ப்பாட்டம்!ஜார் அரசாங்கத்தின் நம்பிக்கைகள் தகர்ந்தன;டிப்லிஸில் உள்ள வேறுபட்ட தேசிய இனங்களை ஒருவருக்கொருவர் எதிராக தூண்டிவிடும் முயற்சி தோல்வியடைந்தது.

பாட்டாளிகளுக்கிடையே ஒருவருக்கொருவர் விரோதத்தை தூண்டிவிட்டு ஒட்டுமொத்த பாட்டாளி இயக்கத்தை பிளவுபடுத்த ஜார் அரசாங்கம் நீண்ட காலமாக முயன்று வந்திருக்கிறது.எனவேதான், கோமல்,கிஸ்னேவ் மற்றும் பல பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.இதே நோக்கத்தோடு பாகு பகுதியில் தூண்டிவிட்டது. இறுதியாக,ஜார் அரசாங்கத்தின் பார்வை டிப்ளிஸில் நிலைகொண்டது. இங்கு ஒரு ரத்தகளறியை காகஸின் மத்திய பகுதியில் உண்டாக்கி,பிறகு மற்ற மாகணங்களுக்கு அதனை பரப்ப எண்ணியிருநதது. காகசஸின் தேசிய இனங்களுக்கிடையே சண்டையை தூண்டிவிட்டு,காகசஸ் பாட்டாளி வர்க்கத்தை அதன் சொந்த ரத்தத்திலேயே முழ்கடிப்பது ஒன்றும் சிறிய விஷயமல்ல! ஜார்அரசாங்கம் மகிழ்ச்சியுடன் தன் கைகளை தேய்த்து விட்டு கொண்டது. ஆர்பீனீயர்களை படுகொலை செய்ய அழைப்பு விடுத்து ஒரு துண்டு பிரசுரத்தைக் கூட விநியோகித்தது. ஜார் அரசு வெற்றி கிடைக்குமென நம்பியது.ஆனால் திடிரென பிப்ரவரி 13 அன்று, ஜார் அரசாங்கம் தனக்கு தானே செய்து கொண்ட தீங்கை போல, ஆயிரகணக்கான ஆர்பீனீயர்கள், ஜார்ஜீயர்கள் ,தார்தாரியர்கள் மற்றும் ரஷ்யர்கள் வேங்க் தேவாலயத்தின் முன் கூடி நம்மிடையே விரோதத்தை விதைத்து கொண்டிருக்கும் சாத்தானுக்கு எதிரான போராட்டத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி ஏற்றுக்கொண்டனர். ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்து சொற்பொழிவுகள் நிகழ்த்த பட்டன. மக்கள்திரள் கைதட்டி பேச்சாளர்களைப் பாராட்டினர்.

நமது துண்டு பிரசுரங்கள்(3000பிரதிகள்) விநியோகிக்கப் பட்டன. மக்கள் ஆர்வத்தோடு வாங்கினர். மக்கள் திரளின் வளர்ச்சிவேகம் அதிகரித்தது. அரசாங்கத்திற்கெதிராக போராடுவது மற்றும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த உறுதி ஏற்பதற்காக, மறுநாள் மீண்டும் அதே தேவாலயத்தின் அருகில் கூடுவது என முடிவு செய்தனர்.

பிப்ரவரி14, ஒட்டுமொத்த தேவாலயத்தின் முகப்பு பகுதியும், அருகிலுள்ள தெருக்களும் மக்களால் நிரப்பட்டன.எங்களது துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க பட்டு வெளிபடையாக படிக்கபட்டன. சொற்பொழிவுகள் ஆற்ற பட்டன. மக்கள் திரளின் உணர்ச்சிவேகம் உயர்ந்தது. சீயேன் தேவாலயம்,மற்றும் மசூதியின் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.
பெர்சிய கல்லறை பகுதியில் மீண்டும் உறுதி எடுத்து பின் கலைவது என முடிவு செய்தனர்.மக்கள் திரள் தங்கள் முடிவை செயலாக்கியது. மசூதிக்கு அருகிலும், பெர்சிய கல்லறைப் பகுதியிலும் சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டன. எங்களது பிரசுரங்கள்(12,000பிரதிகள்) விநியோகிக்கப்பட்டன. மக்களின் உணர்ச்சி வேகம் மேலும், மேலும் அதிகரித்தது. அடக்கி வைக்க பட்ட புரட்சிகர ஆற்றல் வெடித்து கிளம்பியது. அரண்மனைவீதி மற்றும் கோலோவின்ஸ்கி வழியாக அணிவகுத்து சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி அதன் பின்பு கலைவதற்கு முடிவு செய்தனர்
எங்களது குழு நிலைமையை சாதகாமாக்கிக் கொள்ள உடனடிய ஒரு சிறிய தலைமைக் கருக்குழுவை உருவாக்க்யது. ஒரு முன்னணி தொழிலாளியால் தலைமை தாங்கப்பட்ட இக்கருக்குழு முக்கிய பங்கை எடுத்து கொண்டது. கையிலிருந்த செங்கொடி அரண்மணைக்கு எதிரே பட்டொளி வீசிப் பறந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களின் தோள்களீன் மீது தூக்கப்பட்ட ஒருவர் செங்கொடியேந்தி தனது முக்கியதுவம் வாயந்த அரசியல் உரை ஆற்றினார். முதலில் சமூக ஜனநாயக கோரிக்கை கொடியில் இடம் பெறாததைக்கண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றார். இல்லை! இல்லை! அது எங்கள் இதயத்தில் பொறிக்கபட்டுள்ளது என்று பதிலளித்தனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். செங்கொடியின் முக்கியத்துவம் குறித்தும், தனக்குபின் பேச இருக்கும் பேச்சாளர்களை சமூக-ஜனநாயக கண்ணோட்டத்தில் விமர்சித்தும்,அவர்களது அரைமனதுத்தன்மை விமர்சித்தும் பேசிய அவர் ஜாரிசம் மற்றும் முதலாளித்துவம் ஒழிப்பதன் அவசியத்தை விளக்கி ஆர்ப்பாட்டக்காரர்களை சமுகஜனநாயக கட்சியின் செங்கொடியின் கீழ் அணிதிளுமாறு அறை கூவினார். ”செங்கொடி நீடுழி வாழ்க” என மக்கள் திரள் முழங்கியது.ஆர்ப்பாட்டகாரர்கள் வேங்க்தேவாலயம் நோக்கி முன்னேறினர்.செல்லும் வழியில் பேச்சாளரின் பேச்சை கேட்க்க மூன்று இடங்களில் நின்றனர். பின்பு ஜாரிசத்தை எதிர்த்து போராடவும் இப்போது ஆர்பாட்டம் செய்வதைபோல எப்பொழுதும் ஒருமித்தவாறு கலகம் செய்ய உறுதி ஏற்குமாறு பேச்சாளர் கேட்டுக்கொண்டார். நாங்கள் உறுதி ஏற்கிறோம் என மக்கள் திரள் பதிலளீத்தது.வேங்க் தேவாலயம் மற்றும் மைனர்ஸ்கிர்மிஷ் பகுதிகளுக்கு கசாக்கியர்களுடன் சென்றபிறகு ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்தனர்.இதுதான் ”எட்டாயிரம்டிபிலிஸ் குடிமக்களின் ஆர்ப்பாட்டம்” இவ்வாறு தான் ஜார் அரசாங்கத்தின் கபட கொள்கைக்கு டிபிலிஸ் குடிமக்கள் பழிக்குபழி வாங்கினர். இவ்வாறு தான் பாகு குடிமக்களின் ரத்ததிற்காக இழிவான அரசை அவர்கள் பழிவாங்கினர்.டிபிலிஸ் குடிமக்களுக்கு பெருமையும், புகழும் உரித்தாகுக!


செங்கொடியின் கீழ் அணிதிரண்டு,ஜார்அரசுக்கு எதிராக ஆயிரம்முறை மரணதண்டனையை உச்சரித்தனர் டிபிலிஸ் குடிமக்கள்.இழிவான அரசின்,இழிந்த நாய்கள் பின் வாங்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர்.அவர்கள் தங்கள் திட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

ஆனால்,குடிமக்களே! ஜார் அரசு எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களை கொண்டு வராது என்று அர்த்தமாகுமா? ஒருகாலும் இல்லை! இந்த அரசு நீடிக்கும் வரையிலும்,அதன் காலடியிலிருந்து நிலம் நழுவும் வரையிலும், அடிக்கடி இத்திட்டங்களை அது நாடிச்செல்லும். ஜாரிச கொடுங்கோன்மையை அழித்தொழிக்க ஒரேவழி இதுபோன்ற திட்டங்களை துடைத்தெறிவதுதான்!

நீங்கள் உங்கள் வாழ்வையும்,உங்கள் அன்புக்குரியவர்கள் வாழ்வையும் நினைவில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா?நீங்கள் உங்கள் நண்பர்களை விரும்புகிறீர்கள், இத்தீயவர்களை அழிக்க விரும்புகிறீர்கள் இல்லையா? எனில், நினைவில் கொள்ளுங்கள் குடிமக்களே! ஜாரிசம் அழியும் போது மட்டும்தான்,இது போன்ற திட்டங்களும்,ரத்தகளறிகளும் அழியும்! முதலில் நீங்கள் ஜார் அரசாங்கத்தை தூக்கியெறிய பாடுபட வேண்டும்!

அனைத்து தேசியவிரோதங்களையும் ஒழிக்க நீங்கள் விரும்புகிறீர்கள் இல்லையா? மக்களின் அமைதிக்காக நீங்கள் பாடுபடுகிறீர்கள் அல்லவா?அப்படியானால் நினைவில் கொள்ளுங்கள் குடிமக்களே,சமமின்மையும், முதலாளித்துவமும் ஒழியும் போது மட்டுமே அனைத்து விதமான தேசிய விரோத போக்கும் ஒழியும்!

உங்கள் இறுதி இலக்காக நீங்கள் கொள்ள வேண்டியது சோசலிசத்தின் வெற்றிக்காக பாடுபடுவது ம்ட்டுமே! ஆனால்,இப்புவியின் முகத்திலிருந்து வெறுக்கத்தக்க ஜார் அரசை யார் கடைதொழிப்பார்,இந்த திட்டங்களிலிருந்து யார் உங்களை விடுவிப்பது? சமூக ஜனநாயகத்தால் வழி நடத்தபடும் பாட்டாளி வர்க்கம்! யார் இந்த முதலாளித்துவ முறையை ஒழித்து சர்வதேச ஒருமைபாட்டை பூமியில் நிலை நாட்டுவது?சமுகஜனநாயகத்தல் வழி நடத்தபடும் பாட்டாளி வர்க்கம். பாட்டளி வர்க்கம் மட்டுமே உங்களது சுதந்திரத்தையும் அமைதியையும் வென்றெடுக்கும்! எனவே பாட்டாளி வர்க்த்தை சுற்றி ஒன்றுபடுங்கள்.செங்கொடியின் கீழ் அணி திரளுங்கள்.

செங்கொடியின் கீழ் அணிதிரள்வீர்,குடிமக்களே!
ஜார் அரசாங்கம் வீழ்க!
ஜனநாயக குடியரசு நீடுழி வாழ்க!
முதாலாளித்துவம் வீழ்க!
சோசலிசம் நீடுழி வாழ்க!
செங்கொடி நீடுழி வாழ்க!
(தோழர் ஜோசப் ஸ்டாலினால் எழுதப்பட்ட கட்டுரையின் மொழியாக்கம்)


திங்கள், 28 டிசம்பர், 2009

இனத்தை அழித்துவிட்டு மொழிக்கு மாநாடு! மு.கவின் மற்றொரு சாதனை!!

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜுன் மாதம் கோவையில் நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழ் ஆய்வாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்மொழி பற்றிய ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். திமுக ஆட்சியில் நடைபெறும் இம்மாநாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்கின்றன. எதிர் கட்சிகளான அதிமுக,மதிமுக,தேமுதிக,போன்றவை மாநாட்டை புறக்கணித்திருக்கின்றன.’வைகைபுயல்’ வைகோவும், ’காமெடிகிங்’ விஜயகாந்தும் தங்களுக்கே உரித்தான பாணியில் மாநாட்டை புறகணித்த காரணத்தை கூறி காமெடி செய்திருக்கிறார்கள். ஒரு இனம் இல்லாமல்,ஒரு மொழி இல்லை.ஒரு இனம் இல்லாமல் ஒரு மொழி மட்டும் தானாக வளர்ந்து விட முடியாது. மறுகாலனியாக்க சுழலில் ஒரு இனமே சிக்கி செத்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அவ்வினம் பேசக்கூடிய ஒரு மொழிக்கு கோடி கணக்கில் செலவு செய்து மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? முள்வேலி கம்பிகளில் சிக்கி பரிதவிக்கும் லட்சக்கனக்கான ஈழத்தமிழர்களுக்கு இம்மாநாடு ஆறுதல் அளிக்ககூடியதாக இருக்கும் என்று புது விளக்கம் கொடுத்திருக்கிறார் கருணாநிதி. தமிழ்மொழிக்கு மாநாடு நடத்தினால், தமிழர்களுக்கு ஆறுதலாக இருக்கும் எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.தன் குடும்ப வளர்ச்சிக்கு மட்டுமே அயராது உழைக்கும் இந்த ’உலக தமிழினத்தலைவர்’ தமிழின வளர்ச்சிக்காகவும்,தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறேன் என மார்தட்டி கொள்கிறார்.இவர் தமிழ்மொழிக்காகவும், இனத்திற்காகவும் உழைக்கின்ற உழைப்பைக் கொஞ்சம்பார்ப்போம்.
முதல்வர் நாற்காலியில் அமர்ந்தநாளிலிருந்து, அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு இவர் செய்த துரோகங்களை யாராலும் மறக்க முடியாது.1996ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் கடல் வழியாக தமிழகம் வநதனர். அப்போது இனவுணர்வு கொண்ட ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கள் படகின் மூலம் அகதிகளை அழைத்து வந்தனர்.இதை கண்டு அஞ்சிய கருணாநிதி கண்டித்ததோடு மட்டுமல்லாமல், அகதிகளை ஏற்றி வரும் படகுகளின் மீன் பிடி உரிமையை ரத்து செய்தார்.மேலும் தமிழகம் வந்தடைந்த ஈழத்தமிழர்களுக்கு அகதிகள் என்ற தகுதியினை வழங்காமல், தகுந்தசான்றுகள் இல்லாமல் தமிழகம் வந்துள்ள ஈழத்தமிழர்கள் எனக்கூறி சர்வதேச அகதிகளுக்கு வழங்க வேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் பறித்தது இந்த திமுக அரசுதான். அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை புலிகள் எனக்கூறிய ஜெயா,சோ,போன்ற பார்ப்பன பன்றிகளை கண்டு அஞ்சிய கருணாநிதி, சிறப்பு முகாம் என்ற பெயரில் அவர்களை அடைத்து சித்திரவதை செய்தார்.
ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்டஇறுதிதாக்குதலில் சிங்கள இனவெறி மட்டுமில்லை, இந்திய அரசின் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளின் நலன் சார்ந்தும் இருக்கிறது என்பது அம்பலப்பட்டு போனபின்பு, தமிழகத்தின் பல தரப்பிலிருந்தும் போராட்டங்கள் நடைபெற்றது. ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க இந்திய அரசு ராணுவவீரர்கள், ஆயுதங்கள், கொடுத்து உதவிய போது அதை பாதுகாப்பாக தமிழகம் வழியே கொண்டு செல்ல வழித்தடம் அமைத்து கொடுத்தார்.இதை எதிர்த்து போராடியவர்கள் மீது காவல்துறையை ஏவியதோடு மட்டுமல்லாமல்,தடா,பொடா,போன்ற சட்டங்களில் கைது செய்து தன் விசுவாசத்தை இந்திய அரசிற்கும்,சிங்கள அரசிற்கும் காட்டினார்.இவர் தான் தமிழினத்திற்காக உழைத்து கொண்டிருக்கிறாராம்!
மொழி வளர்ச்சிகாக மாநாடு எனக்கூறும் இந்த ‘முத்தமிழ் அறிஞர்’ தான் தில்லைநடராசர்கோயிலில் மொழி தீண்டாமையை அகற்றி தமிழில் வழிபாடு நடத்தப் போராடிய மகஇக,மனித உரிமைப் பாதுகாப்பு மைய தோழர்கள் மீது காவல்துறையை ஏவி காட்டுமிராண்டிதனமாக தாக்குதலை நடத்த செய்தவர்.இந்திய தரகு முதலாளி அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ்பிரஸ் தமிழகத்தில் ஆரம்பிக்கபட்ட போது, இது சிறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது, இதைப்பற்றி சட்டபேரவையில் கேள்வி எழுப்பிய போது இதைபற்றி பேசுவதற்கு எனக்கு நேரமில்லை என பேசியவர்தான், இன்று எழுத்துலகவிபச்சாரிகளுக்கும், கலையுலக விபச்சாரிகளுக்கும் இடையே நடந்த நாய் சண்டைக்கு பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார்.இப்படி தமிழினத்திற்கும், தமிழ் மொழிக்கும் இவர் செய்த துரோகங்களை பட்டியலிட்டு கொண்டேசெல்லலாம். இதுவொருபுறமிருக்க மாநாட்டை புறக்கணித்த பார்பன ஜெயலலிதா ”என் ஆட்சி காலத்தில் நடந்தது தான் தமிழ் மொழி மாநாடு என்றும், என் ஆட்சி காலத்தில் தமிழர்களுக்கு பல நன்மைகள் நடந்தன” என்றும் தெரிவித்திருக்கிறார்.தமிழை நீசபாஷை என்று இழிவுபடுத்தும் பார்ப்பனகும்பலை சேர்ந்த ஜெயலலிதா தான் இவ்வாறு கூறுவது.
தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து ஓட்டு பொறுக்கிகளுக்கும் சூத்திரதாரிகளாக விளங்குபவர்கள் இந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும். இவர்கள் அனைவருமே தமிழ்மொழிக்கும், இனத்திற்கும் துரோகங்களை தவிர வேறெதுவும் செய்ததில்லை. இவ்வகையான அனைத்து ஓட்டுபொறுக்கிகளை அம்பலப்படுத்தி விரட்டியடிப்பது தான் இன்றைய கடமை.முதலில் நாம் தமிழ் இனத்தை காப்பாற்றுவோம்.பிறகு மொழிக்கு மாநாடு ந்டத்துவதைப் பற்றி பேசலாம்.