உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜுன் மாதம் கோவையில் நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழ் ஆய்வாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்மொழி பற்றிய ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். திமுக ஆட்சியில் நடைபெறும் இம்மாநாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்கின்றன. எதிர் கட்சிகளான அதிமுக,மதிமுக,தேமுதிக,போன்றவை மாநாட்டை புறக்கணித்திருக்கின்றன.’வைகைபுயல்’ வைகோவும், ’காமெடிகிங்’ விஜயகாந்தும் தங்களுக்கே உரித்தான பாணியில் மாநாட்டை புறகணித்த காரணத்தை கூறி காமெடி செய்திருக்கிறார்கள். ஒரு இனம் இல்லாமல்,ஒரு மொழி இல்லை.ஒரு இனம் இல்லாமல் ஒரு மொழி மட்டும் தானாக வளர்ந்து விட முடியாது. மறுகாலனியாக்க சுழலில் ஒரு இனமே சிக்கி செத்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அவ்வினம் பேசக்கூடிய ஒரு மொழிக்கு கோடி கணக்கில் செலவு செய்து மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? முள்வேலி கம்பிகளில் சிக்கி பரிதவிக்கும் லட்சக்கனக்கான ஈழத்தமிழர்களுக்கு இம்மாநாடு ஆறுதல் அளிக்ககூடியதாக இருக்கும் என்று புது விளக்கம் கொடுத்திருக்கிறார் கருணாநிதி. தமிழ்மொழிக்கு மாநாடு நடத்தினால், தமிழர்களுக்கு ஆறுதலாக இருக்கும் எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.தன் குடும்ப வளர்ச்சிக்கு மட்டுமே அயராது உழைக்கும் இந்த ’உலக தமிழினத்தலைவர்’ தமிழின வளர்ச்சிக்காகவும்,தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறேன் என மார்தட்டி கொள்கிறார்.இவர் தமிழ்மொழிக்காகவும், இனத்திற்காகவும் உழைக்கின்ற உழைப்பைக் கொஞ்சம்பார்ப்போம்.
முதல்வர் நாற்காலியில் அமர்ந்தநாளிலிருந்து, அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு இவர் செய்த துரோகங்களை யாராலும் மறக்க முடியாது.1996ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் கடல் வழியாக தமிழகம் வநதனர். அப்போது இனவுணர்வு கொண்ட ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கள் படகின் மூலம் அகதிகளை அழைத்து வந்தனர்.இதை கண்டு அஞ்சிய கருணாநிதி கண்டித்ததோடு மட்டுமல்லாமல், அகதிகளை ஏற்றி வரும் படகுகளின் மீன் பிடி உரிமையை ரத்து செய்தார்.மேலும் தமிழகம் வந்தடைந்த ஈழத்தமிழர்களுக்கு அகதிகள் என்ற தகுதியினை வழங்காமல், தகுந்தசான்றுகள் இல்லாமல் தமிழகம் வந்துள்ள ஈழத்தமிழர்கள் எனக்கூறி சர்வதேச அகதிகளுக்கு வழங்க வேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் பறித்தது இந்த திமுக அரசுதான். அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை புலிகள் எனக்கூறிய ஜெயா,சோ,போன்ற பார்ப்பன பன்றிகளை கண்டு அஞ்சிய கருணாநிதி, சிறப்பு முகாம் என்ற பெயரில் அவர்களை அடைத்து சித்திரவதை செய்தார்.
ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்டஇறுதிதாக்குதலில் சிங்கள இனவெறி மட்டுமில்லை, இந்திய அரசின் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளின் நலன் சார்ந்தும் இருக்கிறது என்பது அம்பலப்பட்டு போனபின்பு, தமிழகத்தின் பல தரப்பிலிருந்தும் போராட்டங்கள் நடைபெற்றது. ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க இந்திய அரசு ராணுவவீரர்கள், ஆயுதங்கள், கொடுத்து உதவிய போது அதை பாதுகாப்பாக தமிழகம் வழியே கொண்டு செல்ல வழித்தடம் அமைத்து கொடுத்தார்.இதை எதிர்த்து போராடியவர்கள் மீது காவல்துறையை ஏவியதோடு மட்டுமல்லாமல்,தடா,பொடா,போன்ற சட்டங்களில் கைது செய்து தன் விசுவாசத்தை இந்திய அரசிற்கும்,சிங்கள அரசிற்கும் காட்டினார்.இவர் தான் தமிழினத்திற்காக உழைத்து கொண்டிருக்கிறாராம்!
மொழி வளர்ச்சிகாக மாநாடு எனக்கூறும் இந்த ‘முத்தமிழ் அறிஞர்’ தான் தில்லைநடராசர்கோயிலில் மொழி தீண்டாமையை அகற்றி தமிழில் வழிபாடு நடத்தப் போராடிய மகஇக,மனித உரிமைப் பாதுகாப்பு மைய தோழர்கள் மீது காவல்துறையை ஏவி காட்டுமிராண்டிதனமாக தாக்குதலை நடத்த செய்தவர்.இந்திய தரகு முதலாளி அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ்பிரஸ் தமிழகத்தில் ஆரம்பிக்கபட்ட போது, இது சிறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது, இதைப்பற்றி சட்டபேரவையில் கேள்வி எழுப்பிய போது இதைபற்றி பேசுவதற்கு எனக்கு நேரமில்லை என பேசியவர்தான், இன்று எழுத்துலகவிபச்சாரிகளுக்கும், கலையுலக விபச்சாரிகளுக்கும் இடையே நடந்த நாய் சண்டைக்கு பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார்.இப்படி தமிழினத்திற்கும், தமிழ் மொழிக்கும் இவர் செய்த துரோகங்களை பட்டியலிட்டு கொண்டேசெல்லலாம். இதுவொருபுறமிருக்க மாநாட்டை புறக்கணித்த பார்பன ஜெயலலிதா ”என் ஆட்சி காலத்தில் நடந்தது தான் தமிழ் மொழி மாநாடு என்றும், என் ஆட்சி காலத்தில் தமிழர்களுக்கு பல நன்மைகள் நடந்தன” என்றும் தெரிவித்திருக்கிறார்.தமிழை நீசபாஷை என்று இழிவுபடுத்தும் பார்ப்பனகும்பலை சேர்ந்த ஜெயலலிதா தான் இவ்வாறு கூறுவது.
தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து ஓட்டு பொறுக்கிகளுக்கும் சூத்திரதாரிகளாக விளங்குபவர்கள் இந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும். இவர்கள் அனைவருமே தமிழ்மொழிக்கும், இனத்திற்கும் துரோகங்களை தவிர வேறெதுவும் செய்ததில்லை. இவ்வகையான அனைத்து ஓட்டுபொறுக்கிகளை அம்பலப்படுத்தி விரட்டியடிப்பது தான் இன்றைய கடமை.முதலில் நாம் தமிழ் இனத்தை காப்பாற்றுவோம்.பிறகு மொழிக்கு மாநாடு ந்டத்துவதைப் பற்றி பேசலாம்.
திங்கள், 28 டிசம்பர், 2009
இனத்தை அழித்துவிட்டு மொழிக்கு மாநாடு! மு.கவின் மற்றொரு சாதனை!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)